டெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா கூடுதல் இடங்களில் முன்னிலையில் உள்ளனர். ஆம் ஆத்மியின் அரவிந்த கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இன்று மதியம் 1 மணிநிலவரப்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆம்ஆத்மி 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரசுக்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை பெற முடியவில்லை. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சி முடிவுக்கு வந்து பா.ஜனதா ஆட்சி மலருகிறது.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சியை பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற நினைத்த ஆம் ஆத்மியின் கனவு கலைந்து உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு ஆம் ஆத்மியை படுபாதாளத்தில் தள்ளி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர். இதே கருத்தை அன்னாஹசாரேவும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றிக்கு உழைத்த பா.ஜனதா தொண்டர்களிடம் இன்று மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.