உதயநிதி துணை முதல்வராக அறிவிப்பு- 6 அமைச்சர்கள் மாற்றம்

Images
Spread the love

சென்னை:
துணை முதல்&அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று(28-ந்தேதி) இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாளை
துணை முதல் அமைச்சராக பதவியேற்கிறார்.
மேலும் அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து உள்ளார். 3 அமைச்சர்கள் நீக்கம், மற்றும் அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டு உள்ளது.

3 அமைச்சர்கள் நீக்கம்

Gyk8e Nasaeizyw

தமிழ அமைச்சரவையில் இருந்து மனோதங்கராஜ், ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகிய 3 அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, டாக்டர் கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோரை சேர்க்க முதல்-அமைச்சர் பரிந்துரை செய்து உள்ளார்.

Gyk Z6xkaar0rj

6 அமைச்சர்கள் மாற்றம்

Gggg

இதேபோல் 6 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அரசு தலைமை கொறடாவாகிறார் க.ராமச்சந்திரன்.காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.

ராஜகண்ணப்பன் &காதி மற்றும் பால்வளத்துறை, தங்கம் தென்னரசு -&நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை, பொன்முடி-க்கு கூடுதலாக வனத்துறை, கயல்விழி செல்வராஜ் &மனிதவள மேம்பாட்டுத்துறை, மதிவேந்தன்& ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டு உள்ளார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நாளை மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *