Despite frequent visits by VIPs, Baramati Airport lacks a proper runway.-அடிக்கடி வி.ஐ.பி.க்கள் வந்து சென்றாலும் முறையான விமான வழித்தட வழி இல்லாத பாராமதி விமான நிலையம்

Spread the love

அதன் பிறகு ஓடு தளம் தெரிவதாக கூறி விமானத்தை தரையிறக்க பைலட்டிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நொடிகளில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விமானம் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்திற்குச் சொந்தமானது, மேலும் விமானப் பயிற்சிக்காக ரெட் பேர்ட் ஃப்ளையிங் ஸ்கூல் மற்றும் கார்வர் ஏவியேஷனுக்கு ஓடுதளம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது ஒரு “கட்டுப்பாடற்ற விமான நிலையம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விமான நிலையத்தில் ATC உள்ளிட்ட வழக்கமான விமான நிலைய உள்கட்டமைப்பு மற்றும் தரையிறங்கும் அமைப்பு அல்லது பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு ஏற்பாடுகள் போன்ற வசதிகள் இருக்காது.

ஓடு தளம் குறித்து உடனுக்குடன் விமானி அறைக்கு தகவல்களை அனுப்பும் வசதி இல்லாததால், விமானிகள் வெறும் கண்களால் பார்த்தே விமானத்தை இயக்க வேண்டியிருக்கிறது. இந்த விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்று பாராமதி விமான பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் ஒரு விமானி கூறினார்.

அஜித் பவார் மரணம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *