தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார்.
இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ’, ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.
தற்போதுஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஷாகித் கபூருடன் தேவா என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் தேவா படம் 2025ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை ஷாகித் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடக்கத்தில் இந்தப்படம் மலையாள திரைப்படமான ‘மும்பை போலிஸ்’ படத்தின் தழுவல் என தகவல் வெளியானது. பின்னர் இது முற்றிலும் வித்தியாசமானது என கூறியுள்ளார்கள்.
மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூ இயக்க, சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கிறார். த்ரில்லர் படமாக உருவாகும் இதில் ஷாகித் கபூர் காவல்துறை அதிகாரியாகவும் பூஜா ஹெக்டே பத்ரிகையாளராகவும் நடித்துள்ளார்கள்.
Get ready for a VIOLENT VALENTINE’s DAY
DEVA, releasing in theaters on 14th Feb 2025!@hegdepooja @pavailkgulati #RosshanAndrrews #UmeshKrBansal#SiddharthRoyKapur @ZeeStudios_ @roykapurfilms @ZeeMusicCompany #BobbySanjay @hussainthelal @justarshad @Sumitaroraa pic.twitter.com/lcBOPsgHVl
— Shahid Kapoor (@shahidkapoor) July 19, 2024