Did the young woman who went to bed at night turn into a snake?: Leaving behind snake skin and bangles, she disappeared – இரவில் படுக்கச்சென்ற இளம்பெண் இச்சாதாரி பாம்பாக மாறினாரா?

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிகன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரீனா(20). இப்பெண் இரவில் தனது படுக்கைக்கு படுக்க சென்றார். ஆனால் காலையில் அவரது படுக்கைக்கு சென்றபோது அவரை காணவில்லை. ஆனால் அவரது படுக்கையில் 5 அடி நீளமுள்ள பாம்பு தோல் மட்டும் கிடந்தது.

அதோடு அப்பெண்ணின் தங்க வளையல், மோதிரம் மற்றும் அவரின் ஆடைகளும் படுக்கையில் கிடந்தது. இதனால் அப்பெண் என்ன ஆனார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண் எப்படி காணாமல் போனார் என்ற கேள்வி எழுந்தது.

அவர் காணாமல் போன செய்தி கிராமம் முழுக்க பரவியது. அப்பெண் தூங்கிய அறையின் தரையில் ஒரு பாம்பு குழி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த காலங்களில் அங்கு அவ்வப்போது பாம்புகள் வந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இச்சாதாரி பாம்பாக மாறினாரா?

இதனால் அந்தப் பெண் ஒரு “இச்சாதாரி பாம்பு” (புராண கதைப்படி வடிவத்தை மாற்றும் பாம்பு) என்ற வதந்தி கிராமம் முழுக்க பரவி மக்கள் பீதியடைந்தனர்.

பாம்பு

பாம்பு
representative images

அப்பெண் பில்லிசூனியத்தால்தான் காணாமல் போயிருக்கலாம் என்று கிராம மக்கள் பேசிக்கொண்டனர். ஏராளமான கிராமத்தினர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து பாம்புத்தோலை பார்த்துவிட்டு சென்றனர். அப்பெண் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். அவர்கள் தங்களது மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போலீஸார் அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணை கண்டுபிடிக்க போலீஸார் பல குழுக்களை அமைத்தனர்.

பாம்பு வதந்திகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், “அந்தப் பெண் பாம்பாக மாறியதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகள் ஆகும். அவற்றை மக்கள் நம்பக்கூடாது. பாம்புத் தோல் மற்றும் துணிகள் இருப்பது விசாரணையைத் திசைதிருப்ப அல்லது கவனச்சிதறலை உருவாக்க திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *