கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த வழக்கு, 2017-ம் ஆண்டு முதல் இன்றுவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மொத்தம் 9 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகையின் கார் டிரைவராக இருந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் முதலில் கைது செய்யப்பட்டார். 8வது குற்றவாளியாக திலீப்பின் மீது இதற்கு மாஸ்டர் மைண்ட் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் ஆரம்பத்தில் திலீப் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக எர்ணாகுளம் கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது.
முதல் குற்றவாளியாக என்.எஸ். சுனில் என்கிற “பல்சர் சுனி’, இரண்டாவது குற்றவாளியாக மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளியாக பி. மணிகண்டன், நான்காவது குற்றவாளியாக வி.பி. விஜேஷ், ஐந்தாவது குற்றவாளியாக எச். சலீம் மற்றும் ஆறாவது குற்றவாளியாக பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள், நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்பிலிருந்ததாக இந்த 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சட்டப்பட்டவர்கள் பட்டியலில் 7 முதல் 10 வரையுள்ளவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 8-வதாக இருந்த நடிகர் திலீப் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரம் இல்லாதாதால் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.