Disagreement with Shinde, talks with Uddhav? CM Fadnavis clarifies on Mumbai Mayor issue-ஷிண்டேயுடன் கருத்து வேறுபாடு, உத்தவுடன் பேச்சுவார்த்தை? மும்பை மேயர் குறித்துமுதல்வர் பட்னாவிஸ் விளக்கம்

Spread the love

மும்பை மாநகராட்சிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. ஆனால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க 114 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இருக்கின்றன. ஆனால் மேயர் பதவியை தங்களது கட்சியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கிறது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கவுன்சிலர்கள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு சென்றுவிடக்கூடும் என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

எனவே தனது கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாள்களாக தங்க வைத்து ஏக்நாத் ஷிண்டே பாதுகாத்து வருகிறார். அவர்கள் ஹோட்டலை விட்டு எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

உத்தவுடன் பட்னாவிஸ் பேச்சுவார்த்தையா?

ஏக்நாத் ஷிண்டே மேயர் பதவியை தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுகள் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகிறார். எனவே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மேயர் பதவி தொடர்பாக உத்தவ் தாக்கரேயுடன் மொபைல் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு,

“‘உத்தவ் தாக்கரேயுடன் நான் போனில் பேசியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அது ஒரு வதந்தி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *