பாரீஸ்:
பாரீஸ் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். போட்டி நடைபெறும் நாள் அன்று திடீரென அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வினோத் போகத்தின் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக அவர் விளையாட முடியாமல் போனது. இதனால் மனம் உடைந்த வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
2025ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பம் தொடங்கியதாக அறிவிப்பு
மேல் முறையீடு
இதற்கிடையே இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பாரீசில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தின் தற்காலிக அமர்வு முன்பு தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார்.
இதற்கான விவாதம் நடைபெற்று 3 முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதன் இறுதி தீர்ப்பு வருகிற 16&ந்தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
தள்ளுபடி செய்தது
இந்தநிலையில் தற்போது வினேஷ் போகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.வினோத் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்கான கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போனது.