முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்ககலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட போது கோரிக்கை வழுத்து வருகிறது. ஆனால் இன்னும் கனியவில்லை என்று சூசகமாக தெரிவித்தார். இதனால் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழா நாணயம்
இதேபோல் வருகிற 18&ந்தேதி மறைந்த தி.மு.க.தலைவரும், முன்னாள் முதல்&அமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு விழா நாணயத்தை வெளியிடுகிறார்.இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த நிலையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி காலை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார்.அந்த அறிவிப்பில் முப்பெரும் விழா தொடர்பாக கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-&
அதில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 16&ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் 1947-ல் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி