DNA test reveals the truth: Father who sexually assaulted and impregnated his mute daughter-காட்டிக்கொடுத்த டி.என்.ஏ.சோதனை: வாய் முடியாத மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை

Spread the love

மும்பை தென்பகுதியில் வசிக்கும் வாய்பேச முடியாத 20 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் சைகை மூலம் தனது பாட்டியிடம் தெரிவித்தார். வயிற்றில் பூச்சிகள் ஊர்வது போன்று இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து காமா மருத்துவமனையில் அப்பெண் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் சோதித்தபோது அப்பெண் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அப்பெண்ணிடம் பேசியபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்பெண்ணின் தந்தையிடம் விசாரித்தபோது, `எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து தனக்கு தெரியாது” என்று தெரிவித்தார். அதோடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸிலும் புகார் செய்ய தயாராக இல்லை. அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்த பிறகு இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் கொடுக்க சம்மதித்தார். அப்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் 17 வயது வாலிபர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

அதோடு சந்தேகப்படும் 17 பேரிடம் டி.என்.ஏ.மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் பெண்ணின் தந்தையும் அடங்கும். பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் டி.என்.ஏ.மாதிரி எடுத்து அதோடு யாரது டி.என்.ஏ.ஒத்துக்போகிறது என்பது குறித்து ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை டி.என்.ஏ. ஒத்துப்போனது. அதன் அடிப்படையில் அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு இதில் எந்த வகையில் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *