Doctor Vikatan: அதென்ன மேஜர் ஹார்ட் அட்டாக், மைனர் ஹார்ட் அட்டாக் – இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? | What are major and minor heart attacks: What is the difference between the two?

Spread the love

மைனர் ஹார்ட் அட்டாக்கிலும் இதயத்துக்குப் போகும் ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கும். ஆனால், அது 100 சதவிகிதம் இருக்காது. ரத்தம் போவதை முழுமையாக அடைத்திருக்காது.

மேஜர் ஹார்ட் அட்டாக்கின்போது இசிஜி எடுத்துப் பார்த்தால், இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாகத் தெரியும். நெஞ்சுவலி எனச் சொல்வோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இசிஜி எடுத்துப் பார்ப்பார்கள்.

அதில் தெரிகிற மாற்றங்களை வைத்து, ‘இது  பெரிய அட்டாக்…  உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்துவதைப் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்… அதுதான் மேஜர் ஹார்ட் அட்டாக்.

அதுவே, மைனர் ஹார்ட் அட்டாக்கில், இசிஜியில் தெரியும் மாற்றங்கள் மிதமாக இருக்கலாம். அதனால் அவர்களுக்கு பயோ மார்க்கர்ஸ், ரத்தப் பரிசோதனை போன்வற்றைச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

மேஜர் ஹார்ட் அட்டாக்கில் அதன் அறிகுறிகள் ‘கிளாசிக் சிம்ப்டம்ஸ்’ (classic symptoms) என்று சொல்லக்கூடிய வகையில் ரொம்பவே வெளிப்படையாக இருக்கும்.

உதாரணத்துக்கு, நெஞ்சில் அழுத்தம், இடது கையில் வலி, அதிகமான வியர்வை போன்ற அறிகுறிகள் இருக்கும். அதுவே, மைனர் ஹார்ட் அட்டாக்கில், அறிகுறிகள் ரொம்பவே மிதமாக இருக்கலாம். அதாவது நெஞ்செரிச்சல், மூச்சு வாங்குவதில் சிரமம் போன்ற மிதமான அறிகுறிகளே இருக்கலாம்.

மேஜரோ, மைனரோ… எந்த வகை ஹார்ட் அட்டாக்காக இருந்தாலும் நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து அதை அலட்சியம் செய்யக் கூடாது. புதிதாக ஏதேனும் அறிகுறி தோன்றினாலும், அதாவது தொப்புள் முதல் நாடி வரை ஏதேனும் அசௌகர்யத்தை உணர்ந்தால், அது இதற்கு முன் வந்ததில்லை என்கிற பட்சத்தில் உடனடியாக 325 மில்லிகிராம் ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *