Donald Trump 15% உலக வரி உயர்வு: US Supreme Court தீர்ப்பை மீறும் ட்ரம்ப்?| Court Said No, Trump Said 15%: Global Tariff Shock Continues

Spread the love

நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும், அவரது அரசாங்கமும்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தியில் இருந்த ட்ரம்ப் இப்போது மேலும் வரியைக் கூட்டியுள்ளார்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி

ட்ரம்ப் – பரஸ்பர வரி

“அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அமெரிக்காவிற்கு எதிரான சமீபத்திய தீர்ப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்ததில்…

அமெரிக்க அதிபராகிய நான், உலக அளவிலான‌ வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்துகிறேன்.

பல ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்காவைத் தொடர்ந்து சுரண்டி வந்திருக்கின்றன.

இதனால், அடுத்த சில மாதங்களில் முழுவதும் அனுமதிக்கப்பட்ட, சட்டத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் புது வரிகள் விதிக்கப்படும்.

இது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றும் (MAGA) – முன்னெப்போதும் இல்லாத வகையில்”.

ஆக, ட்ரம்பின் ஆட்டம் இன்னும் முடியவில்லை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *