மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம்: குலோப் ஜாமூன் விருந்து

Dinamani2f2024 072fdf7efcc6 096b 43c9 9fd8 C776659954f52fwhatsapp20image202024 07 3020at2012.33.1920pm.jpeg
Spread the love

கழுதைகளுக்கு திருமணம் நடத்தினால் மழை பெய்யும் என்று நம்பும் மத்தியப் பிரதேச மக்கள்.

மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்யாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், மழை வரவேண்டி, தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சில சாஸ்திரங்களைச் செய்தனர்.

  1. அப்பகுதி மக்கள், சில நாள்களுக்குமுன் கழுதைகளை வைத்து, சில சடங்குகள் செய்து, பின்னர் பயிர் நடவு செய்துள்ளனர். இவ்வாறு செய்வதன்மூலம் மழை பெய்யும் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல, பயிர் நடவு செய்த ஒருவார காலத்திலேயே மழையும் பெய்துள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இரண்டு கழுதைகளுக்கு மணமக்கள்போல அலங்காரமிட்டு, திருமணமும் நடத்தி வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மூன்று கிலோ வரையில் குலோப் ஜாமூனை உணவாக அளித்தும் மகிழ்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாவது, கடந்த 25 ஆண்டுகளாக அவர்கள் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதாகவும், அவ்வாறு செய்வதால்தான் மழை பெய்கிறது என்றும் கூறுகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் செய்யப்படும் இந்த நடைமுறை வெற்றியில் முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *