காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடந்த 2019 -ம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது அவர் ராகுல் காந்தியை கடுமையாக பேசி வந்தார்.அதேபோல் இந்த முறையும் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடிப்பேன் என்று ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார்.
ஸ்மிருதி இராணி தோல்வி
ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாமல், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே சமயம் அமேதியில் ஸ்மிருதி இராணியை எதிர்த்து ராகுல் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் சர்மாவைக் காங்கிரஸ் களம் இறக்கியது. இதனால் ஸ்மிருதி இராணி எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று பா.ஜனதா காட்சியினர் நினைத்து கடுமையான விமர்சனங்களை வைத்தனர். ராகுல் காந்தி தொகுதி மாறிசென்றதையும் கேலி செய்தனர்.
வறுத்தெடுத்த காங்கிரஸ் தொண்டர்கள்
இதற்கிடைய தேர்தல் முடிவில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணியைத் தோற்கடித்து கிஷோரி லால் சர்மா அமோக வெற்றிபெற்றார். தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இராணி, தொடர்ந்து அமேதி தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவரை கடுமையாக கேலி கிண்டல் செய்து வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்க முடியாமல் ஸ்மிருதி ராணி உள்ளார்.
ராகுல்காந்தி வேண்டுகோள்
இதற்கிடையே ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம் என்று ராகுல் காந்தி கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.ஸ்மிருதி இராணியிடம் மட்டும் அல்ல வேறு எந்த தலைவரை பற்றியும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/RahulGandhi/status/1811688892203925983