நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷிடம் உங்களுக்கு முதன் முதலில் பிடித்த, காதல் கொண்ட வாட்ச் எது? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த தனுஷ், “நான் காதல் கொண்ட ஒரு வாட்ச் என்றால், என்னுடைய அம்மா முதன் முதலில் எனக்கு வாங்கி கொடுத்த அந்த வாட்ச் தான்.
ஸ்கூல் படிக்கும்போது அந்த வாட்ச்சை அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார்.
அது டாலரின் விலையை விட குறைவானது தான். அதற்கு பெயர் எல்லாம் கிடையாது. அது ஒரு பிளாஸ்டிக் வாட்ச்.
அதில் லைட் எரியும். பேட்டரி ரொம்ப சின்னதாக இருக்கும். நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன் தான்.