Eggless Cakes: `சாக்லேட் கேக்' – அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

Spread the love

சாக்லேட் கேக்

தேவையானவை:

மைதா – ஒன்றரை கப்

கோகோ பவுடர் – கால் கப்

ரிஃபைண்ட் எண்ணெய் – கால் கப் + 2 டேபிள்ஸ்பூன்

பால் – அரை கப்

தயிர் – அரை கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

சாக்லேட் கேக்

செய்முறை

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைக் கலந்து கட்டியில்லாமல் இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், தயிர், சர்க்கரை மூன்றையும் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக அடிக்கவும். பின்னர் அதில் பேக்கிங் சோடாவைக் கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு அதில் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். பின்னர் சலித்துவைத்துள்ள மாவுக் கலவையை அதில் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் கால் கப் எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவி அதில் பேக்கிங் பேப்பரை வைக்கவும். பேப்பரின் மேல் சிறிது எண்ணெய் தடவி கலந்துவைத்துள்ள கேக் மாவை அதில் ஊற்றி லேசாகச் சமப்படுத்தவும். பின்னர் இதை ஓவனில் வைத்து 20 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். விருப்பப்பட்டால் சாக்லேட் கனாஸ் (Ganache) செய்து அதை கேக் மேல் ஊற்றிப் பரிமாறலாம்.

ஐரோப்பியப் பழங்குடிகளான செல்ட் இனத்தினர், வசந்தகாலப் பண்டிகையின் முதல் நாளில், வட்ட வடிவ கேக்குகளைத் தயாரித்து எடுத்து வந்து கடவுளுக்குப் படைத்தனர். பின், அந்த வட்ட கேக்குகளை மலைப்பகுதியின் மேலிருந்து உருட்டி விட்டனர்.

கனாஸ்

தேவையானவை:

க்ரீம் – அரை கப்

சாக்லேட் சிப்ஸ் – முக்கால் கப்

செய்முறை:

சாக்லேட் சிப்ஸை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். க்ரீமை ஒரு பாத்திரத்தில் ஊற்றிச் சூடாக்கவும். லேசாகக் கொதி வரும்போது அடுப்பை அணைத்து க்ரீமை சாக்லேட் சிப்ஸின் மீது ஊற்றி, ஐந்து நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். இப்படிச் செய்வதால் சாக்லேட் சிப்ஸ் நன்றாக ஊறிவிடும். பிறகு இதைக் கட்டியில்லாமல் பேஸ்ட் போல நன்றாகக் கலந்துகொள்ளவும். கனாஸ் ரெடி. இவ்வாறு தயாரித்த கனாஸை கேக்கின் மேல் தடவிப் பரிமாறவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *