தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணம் உயர்வு
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி இந்த மாதம்(ஜூலை) 1-ந் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தபட்டு இருக்கிறது.
அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான மின்கட்டணம் இதுவரை 0&400 யூனிட் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.4.80 காசுகள் வசூலிக்கப்பட உள்ளது. அதேபோல் 401- 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15 காசுகளில் இருந்து ரூ.6.45 காசுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.18 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகள் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
601 – 800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ9.20 காசுகளில் இருந்து ரூ.9.65 காசுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 -1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 காசுகளில் இருந்து ரூ.10.70 காசுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.11.25 காசுகளில் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கு யுனிட் ஒன்றுக்கு ரூ.10.15 காசாகவும், ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.322 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் ஜுலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கும் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது.
இதேபோல் ஓட்டல்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி.நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கும் கட்டணம் மாற்றி அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதல் 100 யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம்அப்படியே இருக்கும்.
மின்கட்டணம் உயர்வு-முழுவிபரம் tariff
மின்சார வாரியம்
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,மாண்பமை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தாமாகவே முன் வந்து வழங்கிய, கட்டண திருத்த ஆணை எண்.6 15.7.2024 படி, 2024 ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தம், 1.7.2024 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 கோடி மின்நுகர்வோர்களில்
மேலும் 2.47 கோடி மின்நுகர்வோர்களில் 1 கோடி மின்நுகர்வோர்களில் மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றிய முழுவபரங்கள் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அ.தி.மு.க.,பா.ம.க. உள்ளிட்ட அரசியில் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த மாதங்களில் மின்கட்டணம் உயர்த்த அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில் தற்போது மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பதை கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
இது தொடர்பாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிவெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார்
விடியா திமுக முதல்வர்.
மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு?“சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்” என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. @னீளீstணீறீவீஸீஅவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!
உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது,மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி,
மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.