தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.

41 பேரை கொன்று குவித்தவனுக்கு, கையில் விலங்கிட்டவர் போல கை காட்டும் தலைவரான விஜய்யின் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகிறது. நான் விஜய்க்கு எதிரி அல்ல. ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை கேட்க வேண்டும்.