Last Updated:
ஜோதிராதித்ய சிந்தியா நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026 இல், இந்தியா 6G தொழில்நுட்பத்தில் உலகளவில் முக்கிய இடம் பெற்றுள்ளதாக கூறினார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026 இல் பேசிய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியா தற்போது 6G தொழில்நுட்பத்திற்கான உலக அளவில் முக்கிய இடத்தில் இருப்பதாகவும், இது நாட்டின் தொலைத்தொடர்பு பயணத்தில் ஒரு வரலாற்று மாற்றம் எனவும் தெரிவித்தார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026 இல் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றார். அதில் அவர் கூறியதாவது; “6G சேவையில், பிரதமர் இலக்கை நிர்ணயித்திருக்கிறார். பாரத் 6G கூட்டணி, 15 உறுப்பினர்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளன.
இந்தியா முதல் முறையாக 6G தரநிலை நிர்ணய மேசையில் உள்ளது. 6G அறிமுகப்படுத்தப்படும்போது இந்தியாவும் அதில் இருக்கிறது. உலகிலேயே 5G-ஐ வேகமாக அறிமுகப்படுத்திய நாடு இந்தியா. இதனை 22 மாதங்களில் நாம் செய்தோம். நாற்பது கோடி மக்கள் ஏற்கனவே 5G-க்கு மாறிவிட்டனர்.” இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சிந்தியா, சரிபார்க்கப்பட்ட சாதனங்களுடன் சிம் கார்டுகளை இணைப்பது பாதுகாப்பை வலுப்படுத்துகிறது, மோசடியைத் தடுக்கிறது மற்றும் சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது என்று தெரிவித்தார்.
Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “உலக அளவில் 6G தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம்” – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
