சம்பவத்தன்று இருவரும் பியூஷ் வீட்டிற்கு சென்ற போது அங்கு வைத்து அப்பெண்ணுடன் உறவு கொள்ள பியூஷ் விரும்பி இருக்கிறார். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். அப்படி இருந்தும் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டுள்ளார். பின்னர் ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன் என்று சொல்லி அப்பெண்ணின் கை, கால்களை கட்டினார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்து சத்தம்போட்டபோது அப்பெண்ணின் வாயில் துணியை வைத்துள்ளார்.
போதையில் பிணத்துடன் உறவு
அதோடு அப்பெண்ணின் நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டு மூச்சுவிட முடியாமல் பிடித்துக்கொண்டுள்ளார். இதில் அப்பெண் இறுதிமூச்சை விட்டபிறகும் கோபம் தனியால் வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து அப்பெண்ணின் நெஞ்சில் குத்தி இருக்கிறார். இதில் கத்தியே உடைந்திருக்கிறது. கொலை செய்த பிறகு வெளியில் சென்று பீர் வாங்கி வந்து அப்பெண்ணின் உடல் அருகில் அமர்ந்து பீர் குடித்துள்ளார். குடிபோதையில் அப்பெண்ணின் பிணத்தோடு உறவுவைத்துக்கொண்டுள்ளார். அதன் பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இரவு 11 மணிக்கு அப்பெண்ணின் மொபைல் போனில் இருந்து அவரது இளைய சகோதரிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் `இனி வரமாட்டேன்’ என்று அப்பாவிடம் சொல்லிவிடு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு போன் ஆப் ஆகிவிட்டது. அந்த போனை பியூஷ் மும்பைக்கு கொண்டு வந்து உடைத்துள்ளான்”என்றார்.
முன்னதாக அப்பெண் தனது ஆதார் கார்டில் திருத்தம் செய்யவேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். உடனே அவரை அவரது தந்தை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கொண்டு போய்விட்டுள்ளார். மாலையில அப்பெண் தனது சகோதரிக்கு போன் செய்து தனது நண்பர் பியூஷ் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதாக குறிப்பிட்டு இரவு 11 மணிக்கு வருவேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.