பிப்ரவரி 16-ம் தேதி, கட்சி விதிகளை மாற்றி செயல் தலைவரான பிரபுல் படேலுக்கு முழு அதிகாரங்களையும் வழங்கும் வகையில் இவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அல்லது மகன் பார்த் பவாரிடம் சொல்லாமலும், மற்ற எம்.எல்.ஏ-க்களைக் கலந்தாலோசிக்காமல் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, மார்ச் 10-ம் தேதி சுனேத்ரா பவார் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், அஜித் பவாரின் மரணத்திற்குப் பிறகு தான் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலத்தில் அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களையும் செல்லாது என அறிவிக்குமாறு கோரியுள்ளார்.

பிரபுல் படேல் மற்றும் தட்கரே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய இரண்டு நாட்களுக்குள், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அஜித் பவாரின் கட்சிக்கு பிரபுல் படேல் தேசிய தலைவராகிவிட்டார் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
பியூஷ் கோயல் பின்னர் அது தவறுதலாக சொல்லப்பட்ட ஒன்று என்று விளக்கமளித்தாலும், நடந்த சம்பவங்களை பார்க்கும்போது பிரபுல் படேல், தட்கரே மற்றும் கட்சியின் பிற முக்கிய தலைவர்களுக்கு இடையே சில விஷயங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக, பிரபுல் படேலும் சுனில் தட்கரேயும் கட்சியைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே இவ்வாறு செயல்பட்டனர்”என்று ரோகித் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள சுனில் தட்கரே, ரோகித் பவாரின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,” ரோகித் பவார் வெறும் விளம்பரத்திற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு, உண்மையாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியை “ஹைஜாக்” செய்ய முயன்றது ரோகித் பவார் தான். அஜித் பவாரின் குடும்பத்தினரான ஜெய், பார்த் மற்றும் சுனேத்ரா பவாருக்கு எதிராக என்னென்ன சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பது எனக்குத் தெரியும்.
ரோகித் பவார் எங்கள் கட்சியைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னால் பல விஷயங்களைச் சொல்ல முடியும். என்னை வாய் திறக்க வைக்காதீர்கள்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.