French President Macron arrives in India on 3-day visit: Key agreement with PM Modi in Mumbai today-பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 3 நாள் பயணமாக இந்தியா வருகை: மும்பையில் இன்று பிரதமர் மோடியுடன் முக்கிய ஒப்பந்தம்

Spread the love

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மெக்ரானுடன் அவரது மனைவியும் வந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் இன்று மும்பை வருகிறார். அவர்கள் தென்மும்பையில் உள்ள லோக்பவனில் இன்று மாலை முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மோடி

மோடி
Narendra Modi | X

இப்பேச்சுவார்த்தையில் ரபேல் விமானம் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கேட்வே ஆப் இந்தியாவில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியும், மேக்ரானும் இணைந்து இந்தியா-பிரான்ஸ் புதுமை ஆண்டு 2026-ஐ தொடங்கி வைப்பார்கள்.

அதனை தொடர்ந்து இரு நாடுகளின் தொழிலதிபர்கள், ஸ்டார்ட் ஆப் நிறுவன நிறுவனர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் இரு தலைவர்களும் உரையாற்றுகின்றனர். இதை தொடர்ந்து டெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச செயற்கை நுண்னறிவு இம்பேக்ட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இருவரும் புதுடெல்லி புறப்பட்டு செல்கின்றனர். பிரான்ஸ் அதிபர் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவிற்கு வருக. உங்களது பயணம் இரு தரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புவதாக” குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *