Friends who tasted poison to see what it tasted like: 4 minor girls tragically died | விஷம் என்ன சுவையில் இருக்கிறது என்று சாப்பிட்டு சோதித்த தோழிகள்: 4 மைனர் பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

Spread the love

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்பட்டவர்கள் ஆவர்.

5 மைனர் பெண்களின் விபரீத ஆசையால் அவர்களில் 4 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். அப்பெண்கள் பறவைகளை கொல்ல பயன்படும் விஷத்தை எடுத்துக்கொண்டு யாரும் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இந்த விஷத்தை, `குடித்து பார்த்து சாவுகிறோமா அல்லது உயிரோடு இருக்கிறோமா?” என்று சோதித்து பார்ப்போமா என்று பேசிக்கொண்டனர்.

விஷத்தை குடித்து சுவை பார்த்த தோழிகள்

அதோடு அவர்கள் அதனை தண்ணீரில் கலந்து குடித்து என்ன சுவையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் ஐந்து பேரும் விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்தனர்.

விஷம்

விஷம்
மாதிரிப்படம்

இதில் சிறிது நேரத்தில் 4 பெண்கள் அப்படியே மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த 5வது பெண் உடனே கிராமத்திற்கு ஓடி வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார். ஐந்தாவது மைனர் பெண்ணும் விஷம் குடித்து இருந்ததால் அவரை காப்பாற்ற அவருக்கு வேப்ப எண்ணெய் கொடுத்து குடிக்க வைத்து வாந்தி எடுக்க வைத்தனர்.

இதனால் அப்பெண் உயிர் பிழைத்துக்கொண்டார். அப்பெண்ணிடம் விசாரித்தபோது, ”4 பேரும் எனது கண்முன்பாக கீழே விழுந்து இறந்தனர். நான் சிறிதுதான் குடித்தேன். அதையும் துப்பிவிட்டேன். அதனால் பிழைத்துக்கொண்டேன்”என்று தெரிவித்தார். கிராமத்தினர் வெளியில் தெரியக்கூடாது என்று கருதி உடனே 4 பெண்களின் உடல்களையும் எடுத்து வந்து ஒரே சிதையில் வைத்து தகனம் செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *