இந்திய கிரிக்கெட் அணி டி20 உலககோப்பையை வெற்றி பெற்று பெருமை அடைய செய்து இருந்தது. இதனை நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் மும்பையில் பிரம்மாண்ட வெற்றி பேரணியும் நடைபெற்றது.
புதிய பயிற்சியாளர்
இந்த நிலையில் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டிராவிட்டின் பதவி காலம் முடிந்தது. இதைத்தொடர்ந்து புதிய பயிற்சியாளர் தேர்வும் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே இந்திய கரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
காம்பீர் நியமனம்
இது தொடர்பாக கவுதம் காம்பீர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்திய கொடியுடன் பதிவிட்டு இருப்பதாவது:-
இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். வித்தியாசமான தொப்பி அணிந்திருந்தாலும், திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை இந்திய அணியினர் நினைவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்!.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
ஜெய்ஷா வாழ்த்து
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் போர்டின் பி.சி.சி.ஐ தலைவர் ஜெய்ஷா வெளியிட்டு உள்ள பதவில் கூறியிருப்பதாவது:-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது, இதனை அவர் அருகில் இருந்து நெருக்கமாக பார்த்துள்ளார். தனது கிரிக்கெட் விளையாட்டில் நெருக்கடிகளை நேரங்களில் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். எனவே அவர் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியில் மீது அவரது தெளிவான பார்வை மற்றும் அவரது சிறந்த அனுபவத்துடன் இணைந்து இந்த பயிற்சியாளர் பதவியை முழுமையாக நிறைவேற்றுவார். அவர் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும்போது அவரை முழுமையாக ஆதரிக்கிறார். கவுதம் காம்பீரின் புதிய பயணத்திற்கு பி.சி.சி.ஐ. முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதம் கம்பீருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அவர் இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசுக்கு பா.ரஞ்சித்தின் 7 கேள்விகள்