இப்போதும் தாமதமாகி விடவில்லை. தங்கம், வெள்ளி முதலீட்டில் நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தான் தெரிகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி இந்த மாதம் வட்டி விகிதத்தைக் குறைத்தால், உலோகங்களின் மதிப்பு மேலும் ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால், இப்போது தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம்.
முதலீடு என்றால், நீண்ட கால முதலீட்டிற்கு எஸ்.ஐ.பி முறையில் தங்கம், வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம்.
உடனடியாக லாபம் வேண்டுமென்பவர்களுக்கு டிரெடிங் சிறந்த ஆப்ஷன். ஆனால், டிரெடிங்கில் மிகுந்த கவனம் தேவை”.