குடியரசுத்தலைவர் மாளிகையில் கவர்னர்கள் மாநாடு

Modi2
Spread the love

புதுடெல்லி:
டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் கவர்னர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2ந்தேதி) தொடங்கி வைத்தார். இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்பிரதமர்மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

President01

பிரதமர் நரேந்திர மோடி

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
மத்திய மாநில அரசுகளுக்கிடையே பாலமாக செயல்பட வேண்டும்.நலிந்த பிரிவினருடன் இணைந்து செயல்படும் வகையில் மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும். ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, மாநில மக்களின் நலனில், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளைப் பொறுத்தவரை, முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய ஒரு முக்கியமானது என்றார்.

திரௌவுபதி முர்மு

மாநாட்டில் குடியரசுத்தலைவர் திரௌவுபதி முர்மு பேசியதாவது:-
குற்றவியல் நீதி பரிபாலனத்துடன் தொடர்புடைய மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி முறைமையின் புதிய யுகம் நாட்டில் ஆரம்பமாகியுள்ளது.இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களிலிருந்து நமது சிந்தனையில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.
ஜனநாயகம் சுமூகமாக இயங்குவதற்கு, அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மத்திய முகமைகள் சிறந்த ஒருங்கிணைப்புடன் பணியாற்றுவது முக்கியம்.அந்தந்த மாநிலங்களின் அரசியலமைப்பு தலைவர்கள் என்ற முறையில், இந்த ஒருங்கிணைப்பை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆளுநர்கள் சிந்திக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு முறையை மேம்படுத்துவதை வலியுறுத்துகிறது.மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில் இந்த சீர்திருத்த செயல்முறைக்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும் .

Gt9nreebqaaevkm

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று

ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் உதவியது.ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்த ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும்.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று பிரச்சாரத்தை பெரிய அளவில் மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஆளுநர்கள் இதற்கு பங்களிக்க முடியும்.இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம், மண் வளத்தை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ஆளுநர் மாளிகைகள் ராஜ் பவன்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

Gt9ns7pxyaa1uik

அனைத்து ஆளுநர்களும் தாங்கள் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு நியாயம் செய்யும் வகையில் மக்களின் சேவை மற்றும் நலனுக்காக தொடர்ந்து பங்களிப்பு செய்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒலிம்பிக் தோல்வி: கண்ணீருடன் ஓய்வை அறிவித்த ஆன்டி முர்ரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *