இவ்வாண்டின் சிறந்த காதணி (நிறக்கல்) மற்றும் சிறந்த காதணி (வைரம்) நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ல் “இரட்டை விருது’ பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையை அடைந்துள்ளது ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ்.
1964 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜி ஆர் டி ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆபரண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வந்துள்ளது.
காலத்தால் அழியாத வடிவமைப்புகள் நேர்த்தியான கைவினை நுட்பம் மற்றும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்காகப் பாராட்டப்படும் இந்த நிறுவனம், 60 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களைக் கொண்டாடும் ஆபரணங்களை உருவாக்கும் தனது மரபை நிலைநாட்டி வருகிறது. இன்று ஜி ஆர்டி 65 ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது.
அதில் 65 தென்னிந்தியாவிலும் மற்றும் ஒன்று சிங்கப்பூரிலும் உள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள ரத்தினங்களைக் கொண்ட பரந்த கலெக்ஷன்களை வழங்கி வருகிறது.
இந்தப் பாரம்பர்ய சிறப்பினைத் தொடர்ந்து ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அக்டோபர் 25, 2025 அன்று மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற 14வது நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் (NJA) நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய விருதுகளை வென்றது.
ஆண்டின் சிறந்த காதணி ‘நிறக்கல்)’ மற்றும் ஆண்டின் சிறந்த காதணி (வைரம்) என்ற இரு பிரிவுகளிலும் பெற்ற இந்த இரட்டை விருது ஜிஆர்டி-யின் சிறப்பான பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக அமைந்தது.