இந்த ஆதரவு நோயறிதல் துல்லியத்தை மேம்படுத்தி, பின்தங்கிய நோயாளிகளுக்கு தரமான கண் சிகிச்சை வழங்க உதவும். மேலும், வறுமையில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கவும், அந்த அறக்கட்டளையின் முதியோர் இல்லத்தை ஆதரிக்கவும், ஜிஆர்டி பிராண்டு – அடையாறு, ஸ்ரீ மாதா டிரஸ்டிற்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் சுகாதாரம், மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகிய இரு தேவைகளும் பூர்த்தியாகின்றது. தனது சுகாதார முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், செம்பாக்கத்தில் உள்ள ஸ்ரிங்கேரி ஷாரதா ஈக்விடாஸ் மருத்துவமனைக்கு புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளுக்காக ரூ.20 லட்சம் வழங்கி, பின்தங்கிய புற்றுநோய் நோயாளிகள்; காலத்திற்கேற்ற மற்றும் அவசியமான சிகிச்சையை பெற உதவியுள்ளது.

இந்த முயற்சி குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில், எங்கள் பொறுப்பு என்பது, வணிகத்தைத் தாண்டியது என்று நாங்கள் நம்புகிறோம். அதிக ஆதரவு தேவைப்படும் தருணங்களில், மக்களுடன் இருப்பது எங்களுக்கு உண்மையாகவே முக்கியம். காலத்திற்கேற்ற மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகல் என்பது கண்டிப்பாக வாழ்க்கையை மாற்றக்கூடியது; எங்களின் இது போன்ற முயற்சிகள் மூலம், வாழ்க்கையின் மிகச் சவாலான தருணங்களில் நோயாளிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவாக இருப்போம் என்று நம்புகிறோம்” என்றார்.