புதுடெல்லி:
புதுடெல்லியில் இன்று(9ந்தேதி) 54&வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
புற்றுநோய் மருந்து
கூட்டத்தில் ஹெல்த் இன்சூரன்சுக்க்கான வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை மேலும் குறைக்கும் வகையில் இந்த மாற்றம் 12% லிருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. இந்த தகவலை – மத்திய மந்திரி நிர்மலா சீதாரமன் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான ஜிஎஸ்டியில் அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அக்டோபர் 2024 இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.