GT vs PBKS: “இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர விரும்புகிறோம்”- ஸ்ரேயாஸ் ஐயர் | we will continue the game through this victory – shreyas iyer

Spread the love

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், 2021-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்று பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “சீசனை வெற்றியுடன் தொடங்குவது எப்போதுமே ஒரு சிறந்த உணர்வு.  முதலில் பந்துவீச முடிவு செய்தது சரியானதாக அமைந்தது.

எங்கள் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக வைஷாக் மற்றும் சஹால் இருவரும் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 162 ரன்களுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தியது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *