சென்னை
சென்னை,விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (23). இவர் நேற்று காலை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.அப்போது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கிய சாமுவேல்ராஜ் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார்.
சுமார் 50 அடி உயரத்தில் இருந்து குதித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
எம் பி ஏ பட்டதாரியான சாம்வேல்ராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புஜ்ஜி பாபு தொடரில் கடந்த ஆண்டு விளையாடி உள்ளார்.
பிசிசிஐ ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான தொடரில் தெற்கு மண்டல அணியை சாமிவேல்ராஜ் வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
சாமுவேல்ராஜ் ஆப் ஸ்பின் பந்து வீச்சாளர் என்று அவரது நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்
சாமுவேல்ராஜின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை
அவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாக கூறப்படுகிறது.ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே கிரிக்கெட்டில் புதிய வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சாமுவேல் ராஜின் மரணம் கிரிக்கெட்டை நேசித்து விளையாடும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாமுவேல் ராஜின் இறப்புக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பரங்கிமலை காவல் துறை சாமுல்வேல் ராஜின் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)