ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி…
வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் “சமூக வலைதளங்களும்’ செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, “அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை” என்று கூறுகிறது.