வயது மற்றும் பாலினம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்தது குறித்த ஆய்வின் கண்டுபிடிப்புகளையும் மத்திய அரசு எதிர்த்துள்ளது.
ஏனெனில், அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி கொரோனா வைரஸ் பாதிப்பில் ஆண்கள் மற்றும் வயதானவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆய்வில் இளவயதினர் மற்றும் பெண்கள் அதிகமாக உயிரிழந்ததாக முரண்பட்டத் தகவலைத் தெரிவிக்கிறது.
”இதுபோன்ற சீரற்ற முரணானத் தகவல்கள் பல இந்த ஆய்வின் முடிவில் உள்ளதால், இதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது” என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.