Honda Dio: ஹோண்டாவின் புதிய டியோ 125 .. மிரட்டலான புதிய வசதிகளுடன் 1 லட்சத்திற்கும் குறைவாக – Kumudam

Spread the love

இருச்சக்கர வாகனங்களான பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹோண்டா நிறுவனம் டியோ (Dio) 125 ஸ்கூட்டர் மாடலை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்கூட்டரிலுள்ள தனித்துவமான அம்சங்கள் என்ன? என்ன விலைக்கு கிடைக்கிறது? போன்ற தகவல்களை இந்த பகுதியில் காணலாம்.

புதிய டியோ 125, இதன் முந்தைய மாடலின் வடிவமைப்பிலிருந்து மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே, பேர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள், பேர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் இம்பீரியல் ரெட் என 5 நிறங்களில் கிடைக்கிறது.

இதன் எஞ்ஜின் கட்டமைப்பானது, மத்திய அரசாங்கத்தின் OBD2B விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒற்றை சிலிண்டர் PGM-Fi எஞ்சின், 123.92 சிசி, அதிகப்பட்ச பவர்திறன் 8.19 HP, முறுக்கு விசை 10.5 Nm.

4.2 இன்ச் TFT டிஸ்பிளே வசதி புதிய டியோ 125-யில் இடம்பெற்றுள்ளது. மைலேஜ், ட்ரீப் மீட்டர், இண்டிகேட்டர் போன்ற அம்சங்கள் இந்த டிஸ்பிளேயில் தென்படும். மேலும், ஹோண்டா ரோடுசிங்க் (Honda RoadSync app) ஆப் வாயிலாக உங்களது மொபைல் போனை டியோவுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம். இதன் மூலம், கால்/மெசேஜ் அலர்ட் திரையில் தோன்றும், வழிகாட்டுதல் அம்சங்களையும் பயன்படுத்த இயலும்.

புதிய டியோ 125-ல் ஸ்மார் கீ மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட் வசதியும் இடம்பெற்றுள்ளது. ஹோண்டாவின் புதிய டியோ DLX மற்றும் H-smart என இரண்டு வகையான மாடல்களில் இந்திய சந்தைகளில் கிடைக்கிறது. Dio 125 DLX ரூ.96,749-க்கு (Ex-showroom) கிடைக்கிறது. Dio 125 H-smart ரூ.1,02,144-க்கு (Ex-showroom) கிடைக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *