தீயணைப்பு வீரர் உட்பட 13 பேர் உயிரிழப்பு
தீ விபத்து ஏற்பட்ட வளாகத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் மொத்தம் 28 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தீயணைப்பு வீரர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணிக்காக, தீயணைப்பு வீரர்கள் 128 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 57 ஆம்புலன்ஸ்களைச் சம்பவ இடத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர்.
தீ பிடித்த கட்டடங்களில் சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்து தெளிவான தகவல் இல்லை. முதியவர்கள் பெரும்பான்மையாக தீவிபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.