நுரையீரல் புற்றுநோய் இப்போது புகைப்பிடிப்பவர்களை மட்டுமல்ல, புகைப்பிடிக்காதவர்களின் வாழ்க்கையையும் சூறையாடி வருகிறது.
நுரையீரல் புற்றுநோய்
இந்தியாவில்நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புகைபிடிக்காதவர்கள் என்பது சமீபத்திய ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இந்தியாவில் இளைஞர்களிடையே நுரையீரல் புற்றுநோய் வேகமாக பரவி வருவதாக புதிய ஆய்வு கூறுகிறது. மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயாளிகள் புகைபிடிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புகை பிடிக்காதவர்களுக்கு
தென்கிழக்கு ஆசியாவில் நுரையீரல் புற்றுநோய் குறித்த ஆய்வு ‘லான்செட்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, நுரையீரல் புற்றுநோய் 3வது பொதுவான புற்றுநோயாகும். 2020 ஆம் ஆண்டில், உலகளவில் 22 லட்சத்திற்கும் அதிகமான புதிய நுரையீரல் புற்றுநோய்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் சுமார் 18 லட்சம் பேர் இறந்தனர். 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 72,510 புதிய நுரையீரல் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டனர் மற்றும் அந்த ஆண்டில் 66.279 நோயாளிகள் இறந்தனர். 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட புற்றுநோய் இறப்புகளில், 7.8% நுரையீரல் புற்றுநோயால் ஏற்பட்டது.
இதில் சோகமான விஷயம் என்ன வென்றால் இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது மேற்கத்திய நாடுகளை விட 10 ஆண்டுகள் குறைவாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் சராசரி வயது 28.2 ஆண்டுகள். இருப்பினும், இதற்கு ஒரு காரணமாக இந்தியாவின் இளம்வயதினர் அதிகம் இருப்பதாக கூறலாம்.மேற்கத்திய நாடுகளில், நுரையீரல் புற்றுநோய் 54 முதல் 70 வயது வரையும், அமெரிக்காவில் சராசரி வயது 38 ஆண்டுகள் மற்றும் சீனாவில் 39 ஆண்டுகள் ஆகும்.
பீடி, சிகரெட்
இப்போது பெரும்பாலா
ன நுரையீரல் புற்றுநோயாளிகள் பீடி, சிகரெட் பிடிக்காதவர்களாகவே உள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்.இந்தியாவில் 40 முதல் 50 சதவீத நுரையீரல் புற்றுநோயாளிகளும், தெற்காசியாவில் 83 சதவீத பெண் நோயாளிகளும் புகைபிடித்ததில்லை. இதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. நீங்கள் புகை பிடிக்காமல் இருந்தாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் புகைபிடிப்பதன் காரணமாக அந்த புகை உங்கள் உடலுக்குள் செல்கிறது.
இது தவிர, சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் புகைப்பிடிக்காதவர்களும் நுரையீரல் புற்று நோயாளிகளாக மாறுகிறார்கள். ஏன் என்றால் இந்த இடங்க
ளில் வேலை செய்வதால், ரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் உடலில் சென்று நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்து கிறது.
பெண்கள் மத்தியில் சிகரெட் பழக்கம்
இதேபோல் தற்போது நகர்ப்புறங்களில் காற்று மாசுபாடு காரணமாக புகைபிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருகிறது. தற்போது ஆண்களை விட டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் சிகரெட் பழக்கம் அதிகரித்து வருவது புதிய ஆபத்தாக மாறி உள்ளது.
PM2.5 துகள்கள்
இதேபோல் வளிமண்டலத்தில் இருக்கும் PM2.5 துகள்கள் மிகவும் ஆபத்தாக மாறி உள்ளன. இது மிக நுண்ணிய துகள்கள் ஆகும். மனிதனின் முடியை விட 100 மடங்கு மெல்லியது. PM2.5 நைட்ரேட், மற்றும் சல்பேட் அமிலங்கள், ரசாயனங்கள், உலோகங்கள் மற்றும் தூசி, மண் துகள்களை கொண்டவை .
மிகச்சிறியவை என்பதால் சுவாசிக்கும் போது உடலுக்குள் ஆழமாக ஊடுருவி நுரையீரலுக்கு கடு¬மாய நோய் பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் இதயம்மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரையும் பறித்து விடும். அதேபோல் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு இது மாரடைப்பு, நுரையீரல் தொடர்பான நோய்க ளை உண்டாக்கி விடும். சமீபத்திய ஆய்வில் PM2.5 இந்தியாவில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.