புதுதில்லி: ஜூன் வரையான முதல் காலாண்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவிகிதம் சரிந்து ரூ.1,369 கோடியாக உள்ளது. விற்பனை குறைந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,490 கோடியாக இருந்தது.