“I have to earn money to support my family”: An 89-year-old woman sells necklaces on a Mumbai train-குடும்பத்தோடு இருக்க பணம் கொடுக்கவேண்டும்: 89 வயதில் மும்பைரயிலில் நெக்லஸ்விற்கும் செய்யும் மூதாட்டி

Spread the love

அவர் தனது குடும்பத்தோடு தங்குவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் அவருடைய முகவரியைக் கொடுக்கவில்லை”என்று குறிப்பிட்டுள்ளார். புறநகர் ரயிலில் வழக்கமாக பயணம் செய்யும் செய்யும் பெரும்பாலான பயணிகளுக்கு அந்த மூதாட்டியை தெரிந்திருக்கும்.

60 ஆண்டு பயணம்

விலே பார்லேயில் இருந்து நாலாசோபாரா வரை தினமும் பிற்பகல் நேரத்தில் பிரேஸ்லெட் விற்பனை செய்து வருகிறார். அந்த மூதாட்டி திருமணமான சில மாதங்களில் தனது கணவனை இழந்துள்ளார். அதன் பிறகு குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமல் கடந்த 60 ஆண்டுகளாக இது போன்று புறநகர் ரயில்களில் வியாபாரம் செய்து வருகிறார். அந்தப் பெண்ணின் மனவுறுதியும் அர்ப்பணிப்பும் இணையத்தில் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது.

ஒருவர் தனது பதிவில், “நாலாசோபாராவிலிருந்து பயணம் செய்வது எளிதான காரியம் அல்ல, இளைஞர்களுக்குக் கூட அது கடினம். அது போன்ற ஒரு நிலையில் வியாபாரம் செய்யும் மூதாட்டிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், இது ஒரு மகத்தான செயல். சூழ்நிலை மனிதர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. அந்தப் பாட்டியை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொருவர் தனது பதிவில், ”மூதாட்டி பொருட்களை விற்றுவிட்டு, ரயிலில் இருந்த மற்றொரு யாசகம் எடுக்கும் பெண்ணுக்கும் சிறிது பணம் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார். சிலர் அந்த மூதாட்டியிடம் நாங்கள் பொருட்கள் வாங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *