மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்த போது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகனும், டெல்லியில் சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் அக்ஷய், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ”ஒழிக..ஒழிக..” என்று குரல் எழுப்பினார். அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்க்ஷய், ”தமிழக முதல்வர் இந்த தமிழ்நாட்டிற்கு குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல்தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது.
பாசிச மற்றும் தனது சொந்த கருத்துக்களை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது. மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதையொட்டி பேசியிருந்தார்.