2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம்.
அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு.
சர்வதேச நாணய நிதியத்தின், 2026-ம் ஆண்டின் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை கூறுவதாவது…
“இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நினைத்ததை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமாக இருந்தது. நான்காவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்து வருகிறது.

ஆனாலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தற்காலிக காரணிகள் மட்டுப்பட்டால், இந்த வளர்ச்சி 6.4 சதவிகிதமாக 2026-27 ஆண்டில் குறையலாம்
உலக அளவிலான வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அது நிலையாக தொடரும். 2026-ம் ஆண்டு 3.3 சதவிகித வளர்ச்சியையும், 2027-ம் ஆண்டு 3.2 சதவிகித வளர்ச்சியும் இருக்கும்.