10 நாட்களுக்கு முன் இ.பி.எஸ் பற்றியும், பா.ஜ.கவை பற்றியும் தினகரன் என்னவெல்லாம் விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள். இ.பி.எஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன். எனக் கூறி வந்த டி.டி.வி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
டி.டி.வி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார், இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுவார். பா.ஜ.கவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான் தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பா.ஜ.கவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது.” என்றார்.