Ind v Eng: 'பும்ராவுக்குதான் எல்லா பாராட்டுகளும் போகணும்!' – ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்

Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடி 89 ரன்கள் அடித்திருந்த சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

Samson
Samson

பின்னர் சாம்சன் பேசியதாவது, ‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த போட்டியிலிருந்தே எனக்கு நல்ல ஃபார்ம் கிடைத்தது என்று தெரிந்தது. இதுபோன்ற ஆட்டங்களை தொடர்ந்து விளையாட வேண்டும், அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

நாம் ஒரு சிறந்த அரையிறுதி போட்டியை விளையாடினோம். நிலைமைகளை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். வான்கடே மைதானத்தில் நாம் நிறைய போட்டிகள் விளையாடியுள்ளோம்.

இன்று அணியின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. முழு கிரெடிட்டும் ஜஸ்பிரித் பும்ராவிற்கே, தலைமுறைக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் அபூர்வ பதுவீச்சாளர் அவர். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசியதனால் தான் நான் இப்பொழுது இந்த விருதை வாங்கிருக்கிறேன்.

வான்கடே மைதானத்தில் விளையாடுவது நம்ப முடியாத அனுபவம். சதம் அடிக்க வேண்டும் என்று தனியாக நினைத்து அடிக்க முடியாது.

Samson
Samson

அது தானாக வர வேண்டும். நீங்கள் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அணிக்காக நான் பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி,” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *