இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அவர் பேசியதாவது, ‘இது எங்களுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. அதேமாதிரி, இந்தியாவுக்கும் கட்டாயம் வெல்ல வேண்டியபோட்டி.
இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வது சிரமமானதுதான். ஆனால், இந்தியாவுக்கும் வென்றாக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இருக்கிறது.
சிக்கந்தர் ராசா 100% உடற்தகுதியோடு இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு எதிராக கட்டாயம் ஆடுவார்.
இந்திய ரசிகர்களை இந்தியாவில் எப்படி அமைதிப்படுத்தப் போகிறீர்கள் என்பது இது பதில் சொல்வதற்கு கொஞ்சம் ஆபத்தான கேள்வி. நாங்கள் இலங்கைக்கு எதிராக இலங்கையில் எப்படி ஆடினோமோ அப்படித்தான் இங்கேயும் ஆடப்போகிறோம். எங்களுக்கென சில திட்டங்களும் அணுகுமுறையும் இருக்கிறது. அதிலிருந்து மாற விரும்பவில்லை.

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக நாங்கள் தோற்றது ஒருவிதத்தில் நல்லது. அதற்கு முன்புவரைக்கும் நாங்கள் அப்படி மோசமாக ஆடியிருக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான ஆட்டம் மூலம் எங்களால் சில விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அப்படித்தான் இந்தியாவுக்குமென நினைக்கிறேன். அவர்களும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றுவிட்டுதான் வருகிறார்கள்’ என்றார்.