இந்தப் பயணம் எனக்கு அவ்வளவு எளிதானதாக இல்லை. கடந்த ஒரு வருடமாக நான் சிறப்பாக ஆடியிருந்தேன். ஆனால், உலகக்கோப்பையில் ஆரம்ப போட்டிகளில் நான் சிறப்பாக ஆடவில்லை.

தொடரின் இடையில் கொஞ்சம் எமோஷனலாக இருந்தேன். கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பேசினேன். அவர்கள்தான் என்னால் போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என நம்பிக்கையூட்டினார்கள்” என்றிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய திலக் வர்மா, ” கடந்த ஒன்றரை வருடமாக அணிக்காக எந்த பொசிசனிலும் இறங்கி பேட்டிங் ஆட பயிற்சி பெற்றிருந்தோம். அணிக்கு தேவையான நேரத்தில் பேட்டிங் ஆட தயாராக இருந்தோம்.
பீல்டிங்கில் நாங்கள் இன்று சிறப்பாக செயல்பட்டோம் என்று சொல்லமாட்டேன். ஆனால், சில நல்ல கேட்ச்களை பிடித்தோம். அடுத்த சில நாட்களுக்கு முழுமையாக பார்ட்டிதான். பார்ட்டியை முடித்துவிட்டு ஐ.பி.எல் இல் சந்திப்போம்” என்றிருக்கிறார்.