அகமதாபத்தில் (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது.
இந்நிலையில் அணியின் தோல்விக்கு பிறகு
பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், ” முதலில், இந்த அளவுக்கு வந்ததற்காக எங்கள் அணியின் வீரர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த தொடரில் பல சவால்கள் இருந்தன. ஆனாலும் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
அருமையான ரசிகர்கள் முன்னிலையில் இந்த அணி சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் என் அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.