அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ” இந்த தருணத்தை முழுமையாக உணர இன்னும் நேரமாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ நிர்வாகிகளும் ரோஹித்தும் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள்.
2 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே ஆடி வந்தோம். சஞ்சு சாம்சன், வருண், அபிஷேக் போன்றோர் மேட்ச் வின்னர்கள். அவர்களிடம் ஸ்பெசலான ஒரு விஷயம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். பும்ரா இந்த தேசத்தின் சொத்து. ஒரு தலைமுறைக்கான வீரர் அவர். நன்றி அகமதாபாத்!” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.