IND vs NZ: “கடந்த சில மாதங்களாக சச்சினுடன் பேசி வருகிறேன். அவரை போன்ற.!”- தொடர்நாயகன் சஞ்சு சாம்சன்| Player of the series Sanju samson speech

Spread the love

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது.

இந்நிலையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார்.

விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், “இது ஒரு கனவு போல இருக்கிறது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. 2024 உலகக்கோப்பையை வென்ற போது, நான் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

அப்போதிருந்தே இப்படியொரு தருணத்துக்காக கனவு கண்டேன். அதற்காக உழைத்தேன். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சோபிக்காத போது என்னுடைய கனவு மொத்தமும் சுக்குநூறாக உடைந்ததை போல உணர்ந்தேன். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *