ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர். அவருக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவருக்கு வாய்ப்பளிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நான் 6வது இடத்தில் தான் பேட்டிங் செய்வேன். அங்குதான் நான் விளையாடி வருகிறேன்.
ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பதற்கு முந்தையநாள் நான் கேப்டனாக அணியை வழிநடத்துவது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது.
நான் இதற்கு முன்பும் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறேன். எனக்கு கொடுக்கும் பொறுப்பை நான் எப்போதும் ரசிப்பேன்.

இந்தத் தொடரில் கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளது உத்வேகத்தைத் தருகிறது. ஆட்டத்தில் வெற்றியே முக்கியம்.
டெஸ்ட் தொடரில் நடந்ததை மறந்துவிட்டு ஒரு அணியாக ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை ஆட முயற்சி செய்வோம். ஆடுகளத்தைப் பார்த்த பிறகு பிளேயிங் 11 முடிவு செய்யப்படும்” என்று பேசியிருக்கிறார்.