இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.
இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. அதுவும் 2 – 0 முழுமையாகத் தொடரை இழந்திருக்கிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 124 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, இன்று கவுகாத்தி டெஸ்ட்டில் 549 சேசிங்கில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 408 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய சைமன் ஹார்மர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத கேப்டனாக டெம்பா பவுமா மிளிர்கிறார்.
இவருடைய கேப்டன்சியில் 12 போட்டிகளில் ஆடியிருக்கும் தென்னாப்பிரிக்கா, ஒரு போட்டி மழையால் டிரா ஆக மற்ற 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.