இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது.
இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே.எல் ராகுல், “இந்தப் போட்டியில் எங்களுக்கு பதற்றம் இல்லை என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்.
மீண்டும் நாட்டிற்காக கேப்டன் பொறுப்பேற்றுள்ளேன் என்பதால் என் மீது எனக்கே எதிர்பார்புகள் எழுந்துள்ளன. தென்னாப்பிரிக்க வீரர்கள் எங்களை கடைசி எல்லை வரைக்குமே தள்ளினார்கள்.